உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டிலிருந்து ஓட்டுப்பதிவு செய்ய முதியவர்களிடம் படிவம் வழங்கல்

வீட்டிலிருந்து ஓட்டுப்பதிவு செய்ய முதியவர்களிடம் படிவம் வழங்கல்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள் வீட்டிலிருந்தபடி ஓட்டுப்பதிவு செய்வதற்கான படிவத்தை கலெக்டர் வழங்கினார்.இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகள், 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டிலிருந்த படியே அவர்கள் விருப்பத்தின் பேரில் '12டி' படிவம் மூலம் ஓட்டுப்பதிவு செய்ய ஆணையிட்டுள்ளது.அதன்படி, நேற்று விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட அய்யூர் அகரம், பனையபுரம், மண்டபம் ஆகிய கிராமங்களில் உள்ள முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி நேரில் சென்று '12டி' படிவத்தை வழங்கினார்.தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2304 பேர், மாற்றுத் திறனாளிகள் 3473 பேர் என மொத்தம் 5,777 பேருக்கு படிவம் வழங்கப்பட உள்ளது. இதில் விருப்பம் தெரிவிப்பவர்களிடம் நேரில் சென்று ஓட்டு சேகரிக்க உள்ளனர்.தொகுதி உதவி தேர்தல் அலுவலர் தாசில்தார் யுவராஜ், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் கோவிந்தன், பால்ராஜ், சதீஷ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி