| ADDED : ஆக 15, 2024 05:42 AM
வானுார்: வானுார் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அமைச்சர் பொன்முடி வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார்.வானுார் ஊராட்சி ஒன்றியத்தில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள டி.பி.ஆர்., திருமண மண்டபத்தில் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.விழாவில் அமைச்சர் பொன்முடி, வானுார் ஊராட்சி ஒன்றியத்தில் 377 பயனாளிகளுக்கு ரூ. 13 கோடியே 34 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில், கழிவறையுடன் கூடிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், வானுார் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, துணை சேர்மன் பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி, கோட்டக்குப்பம் நகர்மன்ற சேர்மன் ஜெயமூர்த்தி, கவுன்சிலர்கள் புவனேஸ்வரி ராமதாஸ், காமாட்சி விஜயரங்கன், வானுார் பி.டி.ஓ.,க்கள் கார்த்திகேயன், வேதாஸ் மற்றும் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் முரளி, ராஜூ உட்பட பலர் உடனிருந்தனர்.