உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வானுார் வருவாய் கிராமங்களுக்கு 14ம் தேதி ஜமாபந்தி துவக்கம்

வானுார் வருவாய் கிராமங்களுக்கு 14ம் தேதி ஜமாபந்தி துவக்கம்

வானுார் : வானுார் வருவாய் கிராமங்களுக்கான, ஜமாபந்தி வரும் 14ம் தேதி துவங்குகிறது.இது குறித்து தாசில்தார் நாராயணமூர்த்தி செய்திக்குறிப்பு:வானுார் வருவாய் தாசில்தார் அலுவலகத்தில் வரும் 14ம் தேதி முதல் 26ம் தேதி வரை தினமும் காலை 10:00 மணி முதல் அரசு விடுமுறை நாட்களைத் தவிர்த்து விழுப்புரம் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது.அதன்படி 14ம் தேதி வானுார் குறுவட்டத்தில் பட்டானுார், ராயபுதுப்பாக்கம், துருவை, ஆகாசம்பட்டு, அச்சரம்பட்டு, ஒட்டை, வானுார், புளிச்சப்பள்ளம், திருச்சிற்றம்பலம், இரும்பை, கடப்பேரிக்குப்பம், பெரம்பை, மாத்துார்.18ம் தேதி பூத்துறை, பொம்மையார்பாளையம், கோட்டக்குப்பம், வி.புதுப்பாக்கம், நெமிலி குறுவட்டத்தில் கோரைக்கேணி, பொன்னம்பூண்டி, அய்வேலி, இளையாண்டிப்பட்டு, கொண்டலாங்குப்பம், தொள்ளாமூர், இடையப்பட்டு, செங்கமேடு, கடகம்பட்டு, திருவக்கரை, எறையூர்.19ம் தேதி நெலிமி, அம்புழுக்கை, பொம்பூர், கரசானுார், சிறுவை, குன்னம், எலவம்பட்டு, சேமங்கலம், பரங்கனி, உப்புவேலுார் குறுவட்டத்தில் கழுப்பெரும்பாக்கம், கொழுவாரி, காரட்டை, அறுவடை.20ம் தேதி கொமடிப்பட்டு, கிளாப்பாக்கம், காயில்மேடு, வங்காரம், நெசல், நல்லாவூர், தலகாணிக்குப்பம், தேவநந்தல், உலகாபுரம், டி.பரங்கனி, குமளம்பட்டு, புதுக்குப்பம், கொஞ்சிமங்கலம், எடச்சேரி.21ம் தேதி கிளியனுார் குறுவட்டத்தில் கிளியனுார், கொந்தமூர், அருவாப்பாக்கம், தென் சிறுவளூர், பரிக்கல்பட்டு, சிறுநாவூர், தேற்குணம், முருக்கம், காட்ராம்பாக்கம், தைலாபுரம், தென்னகரம், கூத்தபாக்கம், தென்கோடிப்பாக்கம், ஆதனப்பட்டு.24ம் தேதி ஒழிந்தியாப்பட்டு, ராயஒட்டை, கொடூர், ஆண்பாக்கம், வி.கேணிப்பட்டு, வில்வநத்தம், ஆப்பிரம்பட்டு ஆகிய பகுதிகளுக்கும் ஜமாபந்தி நடக்கிறது.அந்தந்த நாட்களில் கிராம மக்கள், தனித்துணை ஆட்சியரிடம் தங்கள் குறைகளை குறிப்பிட்டு மனுக்களாக தரலாம். வருவாய் தீர்ப்பாய மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை