உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வானுார் அருகே விவசாயி வீட்டில் நகைகள் திருட்டு

வானுார் அருகே விவசாயி வீட்டில் நகைகள் திருட்டு

வானுார்: வானுார் அருகே விவசாயி வீட்டிற்குள் புகுந்து ரூ. 3 லட்சம் மதிப்பு நகைகளை திருடி சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், வானுார் அருகே ராவுத்தன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன், 58; விவசாயி. நேற்று முன்தினம் காலை, இவரது மகன் பார்த்தீபன் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார். மனைவி கோகிலா. சஞ்சீவி நகரில் நடந்த விசேஷத்திற்கு சென்றுவிட்டார். கோதண்டராமன், வீட்டை பூட்டி மறைவான இடத்தில் வைத்துவிட்டு வௌியில் சென்றுவிட்டார். இரவு அனைவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். சாவியை எடுத்து வீட்டை திறந்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த ஏழரை சவரன் நகைகள் மற்றும் ரூ. 4 ஆயிரத்தை காணவில்லை. மர்ம ஆசாமிகள், மறைத்து வைத்த சாவியை எடுத்து, கதவையும், பீரோவையும் திறந்து நகைகளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. திருடு போன நகைகளின் மதிப்பு ரூ.3 லட்சமாகும். இதுகுறித்து, ஆரோவில் போலீசில் கோதண்டராமன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, வீடு புகுந்து திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி