குறு மைய அளவில் கபடி போட்டி
திண்டிவனம்: திண்டிவனம் சந்தைமேடு, புனித பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளியில், திண்டினவம் குறு வட்ட மைய அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் திண்டிவனம், ஒலக்கூர், மயிலம் வட்டாரத்தை சேர்ந்த 47 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகள் 14 வயது மற்றும் 17, 19 வயதிற்குட்பட்ட மூன்று பிரிவுகளாக நடந்தது. போட்டிகளை விழுப்புரம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். போட்டிக்கான செயலாளர் அடைக்கலமேரி, பள்ளி முதல்வர் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்.19 வயதிற்கு உட்பட்ட பிரிவில், ரெட்டணை ேஹாலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளி முதல் இடத்தையும், ஆலகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில், திண்டிவனம் செயின்ட் ஜோசப் பள்ளி முதல் இடம், தாதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடம், 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில், தாதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் இடம், ரெட்டணை ேஹாலி ஏஞ்சல்ஸ் பள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.