உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கன்னிகா பரமேஸ்வரி பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா

கன்னிகா பரமேஸ்வரி பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா

திண்டிவனம், : கன்னிகாபரமேஸ்வரி பள்ளியில், காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. திண்டிவனத்திலுள்ள கன்னிகாபரமேஸ்வரி உயர்நிலைப்பள்ளியில், திண்டிவனம் வட்டார ஐக்கிய நாடார் சங்கத்தின் சார்பில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு, ஐக்கிய நாடார் சங்கத்தின் தலைவர் பால்பாண்டியன்ரமேஷ் தலைமை தாங்கி பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுதர்சனன், ஆரம்ப பள்ளி தலைமையாசிரியை வளர்மதி, நாடார் சங்க நிர்வாகிகள் கதிரேசன், பார்வதிமுத்து, ஜெபராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியை சேர்ந்த மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி