உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் சங்கர மடத்தில் காஞ்சி பெரியவர் ஜெயந்தி விழா

விழுப்புரம் சங்கர மடத்தில் காஞ்சி பெரியவர் ஜெயந்தி விழா

விழுப்புரம்: விழுப்புரம் சங்கரமடத்தில் காஞ்சி பெரியவர் சந்திரசேகரரேந்திர சரஸ்வதி ஸ்வாமியில் 131 ஜெயந்தி விழா நடந்தது. விழுப்புரம் சங்கரமடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காலை 9 மணிக்கு கோ பூஜையுடன் தொடங்கி, ஏகாதச ருத்ர பாராயணம், ஹோமங்கள் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து மகா பெரியவர் சுவாமி மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்விக்கப்பட்டு, மகாதீப ஆராதனை நடந்தது. இதன் இடையே காஞ்சி மகா பெரியவரின் தெய்வத்தின் குரல் தொகுப்பிலிருந்து, நம் நாட்டின் ஜனநாயக தேர்தல் முறை குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அடங்கிய புத்தகத்தினை தர்ம ரக்ஷண சமிதி சார்பாக புத்தகமாக வெளியிடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி