உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சேறும் சகதியுமாக மாறிய கண்டமங்கலம் சுரங்க பாதை

சேறும் சகதியுமாக மாறிய கண்டமங்கலம் சுரங்க பாதை

கண்டமங்கலம: கண்டமங்கலம் நான்கு வழிச்சாலையின் குறுக்கே உள்ள சுரங்கபாதை சேறும் சகதியுமாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழி சாலையில் கண்டமங்கலம் கிராம மக்களின் தொடர் போராட்டம் காரணமாக கண்டமங்கலம்-நவம்மாள் மருதூர் சாலை சந்திப்பு அருகே பல லட்சம் செலவில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்து பல மாதங்கள் கடந்தும் தொடர் மழையின் காரணமாக சுரங்க பாதையில் தேங்கி நின்ற மழை நீர் அகற்றப்படாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சுரங்கப்பாதையை கடந்து செல்ல முடியாத அவலம் இருந்து வந்தது. இந்த நிலையில் பொதுமக்கள் போராட்ட அறிவிப்பு காரணமாக சுரங்க பாதையில் இருந்த மழை நீர் மற்றும் கழிவு நீர் இஞ்சின் மூலம் அகற்றப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையால் சுரங்கப் பாதை சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதியடைகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை