உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கருணாநிதி நுாற்றாண்டு விழா நலத்திட்ட உதவி வழங்கல்

கருணாநிதி நுாற்றாண்டு விழா நலத்திட்ட உதவி வழங்கல்

செஞ்சி: நல்லாண் பிள்ளை பெற்றாள் ஊராட்சியில் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். செஞ்சி ஒன்றியம் நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கினார். சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு முன்னிலை வகித்தார். இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் கதிரவன் வரவேற்றார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில் தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சேகர், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்த், துணை சேர்மன் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் பச்சையப்பன், விஜயராகவன், நெடுஞ்செழியன், மாவட்ட கவுன்சிலர் அகிலா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை