உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிக் பாக்சிங் போட்டி மாணவர்கள் சாதனை

கிக் பாக்சிங் போட்டி மாணவர்கள் சாதனை

திண்டிவனம் : திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கிக் பாக்சிங் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.மகாராஷ்டிரா மாநிலம், பூனேவில், தேசிய அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.பள்ளியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் தமிழரசன் தங்க நாணயமும், சிறந்த ஆட்டக்காரர் விருதையும் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் தேவராஜ் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி துணைத் தலைவர் வேல்முருகன் மாணர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.பள்ளி முதல்வர் அருள்மொழி, கராத்தே பயிற்சி ஆசிரியர்கள் இளங்கோவன், சங்கவி உட்பட பலர் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் இளையராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை