உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகள் கடத்தல்- தாய் புகார்

மகள் கடத்தல்- தாய் புகார்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே திருமணம் ஏற்பாடு செய்த நிலையில் மகள் கடத்தப்பட்டதாக தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.விக்கிரவாண்டி அடுத்த அத்தியூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராயன் மகள் விஜயா, 19; அரகண்டநல்லுார் தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பி.காம்., படித்து வந்தார். இவருக்கு வரும் ஜூலை மாதம் 7ம் தேதி திருமணம் ஏற்பாடாகி இருந்தது. இந்நிலையில் நேற்று காலை 11:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறிச் சென்ற விஜயா வீடு வீடு திரும்பவில்லை.அவரது தாய் கனகாம்பரம், பல இடங்களில் மகளைத் தேடிய நிலையில், அவரது மொபைல் போனுக்கு, 'நான் தான் உங்கள் மகளை அழைத்துச் சென்று விட்டேன்' என அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேசியுள்ளார்.இது குறித்து கனகாம்பரம் அளித்த புகாரின் பேரில், கஞ்சனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ