உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வண்ணான் குல கருப்ப சுவாமி கோவிலில் கிடா வெட்டு திருவிழா

வண்ணான் குல கருப்ப சுவாமி கோவிலில் கிடா வெட்டு திருவிழா

விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் வண்ணான் குல கருப்பசுவாமி கோவிலில் முதலாம் ஆண்டு கிடா வெட்டும் திருவிழா நடந்தது.விழாவையொட்டி, கடந்த 13ம் தேதி மாலை 4:00 மணிக்கு மேல் கருப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், ஆனந்த வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து சக்தி கரகம் ஜோடித்து வந்து தீபாரதனை நடந்தது.தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு, கிடா வெட்டு திருவிழா நடந்தது. இதில் வண்ணான் குல கருப்பு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை செய்து, ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பின், அசைவ படையலான கிடா விருந்து படையலிட்டு மகா தீபாராதனை நடந்தது.கீழ்பெரும்பாக்கம், காகுப்பம், எருமணந்தாங்கல், பொய்யப்பாக்கம், மருதுார், முத்தோப்பு, முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, வளவனுார் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து, அசைவ விருந்திலும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி