உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கள்ளச்சாராய பாக்கெட்டுடன் குடிமகன் ரகளை விழுப்புரம் பஸ் நிலையத்தில் தான் இந்த கூத்து

கள்ளச்சாராய பாக்கெட்டுடன் குடிமகன் ரகளை விழுப்புரம் பஸ் நிலையத்தில் தான் இந்த கூத்து

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டதாக போலீசார் கூறிய நிலையில், பஸ் நிலையத்தில் குடிமகன் ஒருவர் சாராய பாக்கெட்டோடு வலம் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறை சார்பில் தொடார்ந்து சாராய ரெய்டுகள் நடத்தப்பட்டு, சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.இதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை ரெய்டு மூலம் கள்ளச்சாராய விற்பனை ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், சாராயம் காய்ச்சுவோர், விற்பனை பற்றி மக்கள் தகவல் கூற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.போலீசார் தீவிரமாக சாராய ரெய்டு மூலம் கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டதாக பெருமையோடு கூறி கொள்ளும் சூழலில், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் ஒரு குடிமகன், கள்ளச்சாராய பாக்கெட்டை குடித்து கொண்டு, தள்ளாடி அங்குள்ள பயணிகளை அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராய பாக்கெட்டோடு, குடிமகன் ஒருவர், பகல் 12.00 மணிக்கு, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தள்ளாடி வந்ததோடு, அவர் அங்கு அமர்ந்து சாராய பாக்கெட்டை திறந்து குடித்து கொண்டு கூச்சலிட்டபடி சுற்றித்திரிந்தார்.இதை கண்ட அங்கிருந்த பெண் பயணிகள் பலர் அச்சத்தோடு, கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டும் இவர்கள் திருந்தவே இல்லை என கூறி கொண்டும், இவர்களுக்கு சாராயம் எங்கு கிடைக்கிறது, போலீசார் என்ன செய்கின்றனர் என புலம்பிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை