உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லோக்சபா தேர்தல் பொறுப்பாளர் செஞ்சி சிவாவுக்கு பாராட்டு

லோக்சபா தேர்தல் பொறுப்பாளர் செஞ்சி சிவாவுக்கு பாராட்டு

செஞ்சி: லோக்சபா தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி கவுரவித்தார். நடந்து முடிந்த லோக்சபா தேர்லில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்கு துணையாக செயல்பட்ட தொகுதி பொறுப்பாளர்களுக்கு தி.மு.க., இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது குறிஞ்சி இல்லத்தில் நேற்று முன்தினம் பாராட்டு விழா நடந்தது. இதில் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சங்கராபுரம் சட்டசபை தொகுதியில் தேர்தல் பொறுப்பாளராக பணியற்றிய தலைமை தீர்மானக்குழு உறுப்பினர், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரிய உறுப்பினர் செஞ்சி சிவாவுக்கு, அமைச்சர் உதயநிதி சால்வை அணிவித்து கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மை செயலாளர், நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அன்பகம் கலை உள்ளிட்ட நிர்வாகிககள் கலந்து கொண்டனர். விழாவிற்கு பின் அனைவருக்கும் விருந்து நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ