உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செவன்த் டே ஒயிட் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

செவன்த் டே ஒயிட் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் செவன்த் டே ஒயிட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து 24ம் ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது.மாணவிகள் ஹரிப்பிரியா, 486, நித்யஸ்ரீ, 475, ஹனீஸ் பேகம் 468 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு, பள்ளி தாளாளர் பாஸ்டர் திரவியராஜ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் அதிசயம் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் பிரபு வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் விக்கிரவாண்டி பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவிகளை கவுரவித்து பாராட்டினார்.முதன்மை ஆசிரியை காயத்ரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை