உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் : கீழ்ப்பெரும்பாக்கம் ஸ்ரீ ஏழை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் ஸ்ரீ ஏழை முத்துமாரியம்மன் கோவில், புணரமைப்பு தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமங்கள், முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை வாஸ்து சாந்தி, கோபூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, 108 மூலிகை திரவிய ஹோமம் நடந்தது. தொடர்ந்து, யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடாகி காலை 10:00 மணிக்கு கோவில் கோபுரம் மற்றும் மூலவர் மற்றும் பரிவார தேவதைகள் சன்னதிகளுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ