மேலும் செய்திகள்
பெண்கள் பாதுகாப்பு கல்லுாரியில் விழிப்புணர்வு
05-Mar-2025
விழுப்புரம்: விழுப்புரம் அண்ணா பல்கலை., அரசு பொறியியல் கல்லூரியில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இயந்திரவியல் துறை தலைவர் பிரகாஷ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் செந்தில் தலைமை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரான நீதிபதி ஜெயச்சந்திரன் சிறப்புரையாற்றினார். அவர், பொது மக்களுக்கான இலவச சட்ட உதவிகள், மாணவர்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கான சிறப்பு சட்டங்கள் குறித்தும், போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், போதை பொருள் பயன்படுத்துபவர்கள், விற்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை விவரங்களையும் விளக்கினார். மேலும், மாணவர்களின் சட்டம் சார்ந்த கேள்விகளுக்கும், அவர் விரிவாக விளக்கமளித்தார். மாணவி பிரியவர்ஷினி நன்றி கூறினார். நீதிமன்ற ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
05-Mar-2025