உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் அருகே இரண்டு கோவில்களின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை

மயிலம் அருகே இரண்டு கோவில்களின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை

மயிலம்: மயிலம் அருகே உள்ள கீழ்பேரடிகுப்பம் கிராமத்தில் இரண்டு கோயில்களில் பூட்டை உடைத்து தங்க நகை, உண்டியல் காணிக்கையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மயிலம் அடுத்த கீழ்பேரடிகுப்பம் கிராமத்தில் குப்பு மாரியம்மன், பொன்னியம்மன் கோவில்கள் உள்ளது. நேற்று முன்தினம் மாலை கோவில் பூசாரி பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டி சாவி எடுத்துச் சென்றுள்ளார். நேற்று காலை 7:00 மணி கோவிலை திறக்க கோவில் பூசாரி வந்துள்ளார். அப்பொழுது கோவிலின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் உள்ளே சென்று பார்த்த பொழுது கருவறையிலிருந்து மூலவரின் நெற்றியில் கட்டப்பட்டிருந்த தங்க பொட்டுக்கள், அம்மனுக்கு அணிந்திருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.மேலும் அதே நாளில் பொன்னியம்மன் கோயிலிலும் பூட்டை உடைத்து அம்மனின் நெற்றியில் இருந்த தங்கத்தால் ஆன பொட்டுகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இரண்டு கோவில்களிலும் மொத்தம் 4 கிராம் நகைகள் திருடுபோய் உள்ளது. இது குறித்து கிராம மக்கள் கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.இது போன்றுகடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மயிலம் அடுத்த கள்ளக்கொளத்துார் கிராமத்தில் கோவிலில் பூட்டை உடைத்து இரண்டரை சவரன் நகைகள், கோவில் உண்டியல் காணிக்கை பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை