உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உங்களை தேடி; உங்கள் ஊரில் திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

உங்களை தேடி; உங்கள் ஊரில் திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

மரக்காணம்: கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட தந்திராயன்குப்பம், பொம்மையார்பாளையத்தில் 'உங்களைத்தேடி; உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளின் நிலை குறித்து கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.ஆய்வின்போது, தந்திராயன்குப்பத்தில், கடலில் மீன்பிடித்து கரை திரும்பிய மீனவர்களிடம் மீன்பிடி தொழில் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, பொம்மையார்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டு உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.பின், பள்ளியில், சுற்றுச்சுவர், வகுப்பறைகள், குழந்தைகள் மையம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் பார்வையிட்டுகேட்டறிந்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சஹாய் மீனா, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்