உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதி மறுப்பு திருமணத்தை நடத்தியதற்கு ஆதரவளித்த மா.கம்யூ., கட்சி அலுவலகத்தில் புகுந்து அராஜகம் செய்தவர்களை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் அவலுார்பேட்டை கடைவீதியில் மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கிளைச் செயலாளர் சக்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், வட்ட செயலாளர் முருகன், வட்ட குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், குமார், அண்ணாமலை மற்றும் ஏழுமலை, வடமலை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ