மேலும் செய்திகள்
மயங்கி விழுந்த மூதாட்டி சாவு
10-Mar-2025
விழுப்புரம்: வளவனூர் அருகே திருமணமான பெண்ணை தாக்கிய, நபரை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலூர் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பாலு மகன் புண்ணியமூர்த்தி, 26; இவர், கடந்த 10ம் தேதி, விழுப்புரம் அடுத்த கலிஞ்சிக்குப்பத்தைச் சேர்ந்த, 22 வயதுடைய தனது பழைய பெண் நண்பரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அந்த பெண்ணிற்கு திருமணம் ஆன பிறகும், நட்பாக மீண்டும் பழக வேண்டும் என கூறி, அவர் வற்புறுத்தியுள்ளார். அப்போது, அந்த பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து திட்டி, தாக்கியுள்ளார். இது குறித்து, அந்த பெண் அளித்த புகாரின் பேரில், புண்ணியமூர்த்தி, அவரது நண்பர்களான சிவா 25; ராஜசேகர், 26; ஆகியோர் மீது, வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து, புண்ணியமூர்த்தியை கைது செய்தனர்.
10-Mar-2025