உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கொத்தமங்கலம் அரசு பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்

கொத்தமங்கலம் அரசு பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்

மயிலம்: மயிலம் அடுத்த கொத்தமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மேலாண்மைக் குழு தலைவி வள்ளி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் தண்டபாணி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஜெயராஜ் பிரபு வரவேற்றார். கூட்டத்தில், கடந்த காலத்தில் பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் செய்யப்பட்ட பணிகள். வரும் காலத்தில் செய்யக்கூடிய பணிகள் என்ன என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.மேலும், பள்ளிக்கு புதிதாக மேலாண்மைக் குழு தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து பேசினர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.கணித ஆசிரியர் புருஷோத்தமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி