உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திண்டிவனம்: தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திண்டிவனத்தில் நேற்று நடந்தது. திண்டிவனத்திலுள்ள தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, அமைப்பின் மாநில தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச் செயலாளர் மணிமாறன், மாநில பொருளாளர் பால்ராஜூ, நிர்வாகிகள் சரவணன், தஞ்சை சிவா, செந்தில்குமார், கோவிந்தராஜ், விக்டர் ராஜ் உள்ளிட்டவர்கள் பேசினர். கூட்டத்தில் ஒலி, ஒளி, ஸ்டேஜ் டெக்கரேஷன் நிர்வாகிகள் இளங்கோ, வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, அழகிரி, திண்டிவனம் நிர்வாகிகள் முருகன், பிரபாகரன், வினோத்ராஜா, ஐயப்பன், வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு ஜி. எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ