| ADDED : ஜூன் 11, 2024 06:55 AM
திண்டிவனம்: திண்டிவனம் மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. திண்டிவனம் மீனாட்சி அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள பால விநாயகர், மீனாட்சி அம்மன், பாலமுருகன் கோவில்களின் கும்பாபிஷேகம் கடந்த ஏப்.,22ம் தேதி நடந்தது. இதையொட்டி கோவிலில் மீனாட்சி அம்மனுக்கு 48 நாட்கள் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது.இதையொட்டி மூலவர் மீனாட்சி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு திருகல்யாண வைபவம் நடந்து, தீபாராதனை செய்யப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை விழா குழு தலைவர் கவுன்சிலர் ரேணுகா இளங்கோவன் செய்திருந்தார்.