| ADDED : மே 03, 2024 10:03 PM
விழுப்புரம், -விழுப்புரத்தில் விஸ்வகர்மா தச்சுத் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் முருகசேன், அறக்கட்டளை தலைவர் வேலாயுதம், முன்னாள் செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை தண்டபாணி, மாநிலத் தலைவர் அப்பர் லட்சுமணன், கைவினைஞர் முன்னேற்ற கட்சி தலைவர் பாலு, உமாபதி, சென்னை லோகேஷ்குமார் சர்மா சிறப்புரையுற்றினர்.கூட்டத்தில், விஸ்வகர்மா ஜெயந்திக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும். கோவில்களில் விஸ்வகர்மா சமூகத்தினரை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும். தச்சு தொழிலாளர்களுக்கு தொழில்பேட்டை ஏற்படுத்தி தர வேண்டும். இலவச வீட்டுமனைபட்ட வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தமிழக பாட்டாளி கட்டட தொழிலாளர் சங்கம், ஆட்டோ தொழிற் சங்கம் சார்பில் கட்சி அலுவலகத்தில் மேதின கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. சங்க மாநிலத் தலைவர் மேகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சீனுவாசன், ஆட்டோ சங்க மாநில பொருளாளர் பாலசுந்தரம், மாவட்ட செயலாளர் சுரேஷ், துணைச் செயலாளர் குமார், ஆட்டோ சங்கத் தலைவர் சோலை உட்பட பலர் பங்கேற்றனர்.