உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ம.க., வேட்பாளருக்கு ஆதரவாக மா.து.செ., தீவிர ஓட்டு சேகரிப்பு

பா.ம.க., வேட்பாளருக்கு ஆதரவாக மா.து.செ., தீவிர ஓட்டு சேகரிப்பு

திண்டிவனம், : திண்டிவனம் 19வது வார்டில் பா.ம.க., வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.விழுப்புரம் லோக்சபா தொகுதியில் பா.ம.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முரளிசங்கருக்கு ஆதரவாக, மாவட்ட துணைச் செயலாளர் பால்பாண்டியன் ரமேஷ் தலைமையில், திண்டிவனம் நகராட்சி 19வது வார்டில் வீடு வீடாகச் சென்று மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.நேரு வீதி, காமாட்சியம்மன் கோவில் தெரு, ரொட்டிக்கார தெரு, கீரைக்கார தெரு, தேவங்கர் தெரு உள்ளிட்ட தெருக்களில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் மாம்பழம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.பா.ம.க., சமூக நீதி பேரவை மாநிலச் செயலாளர் பாலாஜி, சிறுபான்மை பிரிவு பிச்சை முகமது, நகர செயலாளர் ராஜேஷ், கவுன்சிலர் மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர்கள் சவுந்தர், செந்தில், மகளிர் அணி தனம், குமாரி, தேவி, ஏழுமலை , டாக்டர் ரவீந்திரன், நிர்வாகிகள் உமாபதி, தயாளன், சுதாகர், அருண், வழக்கறிஞர் ஜீவா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ