உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கள்ளச்சாராயத்தை தடுக்க நடவடிக்கை : ஐ. ஜே.கே., மாநில நிர்வாகி வலியுறுத்தல்

கள்ளச்சாராயத்தை தடுக்க நடவடிக்கை : ஐ. ஜே.கே., மாநில நிர்வாகி வலியுறுத்தல்

விழுப்புரம் : கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தால் பல உயிர்கள் பறிபோன சம்பவம் மிகுந்த மனவேதனை அளிப்பதாக, ஐ.ஜே.கே., மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தினால் பல உயிர்கள் பறிபோன சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் 15க்கும் மேற்பட்டோர், கள்ளச்சாராயத்தால் பலியாகினர். ஓராண்டுக்குள் கள்ளக்குறிச்சியில் 35க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம், கள்ளக்குறிச்சி பகுதியில், கள்ளச்சாராயம் அதிகளவில் விற்பனையாவது தெரியவந்துள்ளது.இச்சம்பவத்திற்கு, கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன், கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதற்கு, மாநில அரசு உரிய தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை