உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வியாபாரி தற்கொலை போலீஸ் விசாரணை

வியாபாரி தற்கொலை போலீஸ் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரத்தில் வியாபாரி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் பாலசுப்ரமணி, 25; விழுப்புரம், சாலாமேடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 6 மாதங்களாக சைக்கிளில் போர்வை விற்கும் வியாபாரம் செய்து வந்தார்.இவர், சில நாட்களுக்கு முன் தனது தந்தை சக்திவேலிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு வியாபாரம் சரியில்லை என கூறியுள்ளார். தொடர்ந்து 3 நாட்களாக, மொபைல் போனை எடுக்காததால், சந்தேகமடைந்த தந்தை சக்திவேல், கடந்த 6ம் தேதி சாலாமேட்டில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார்.அங்கு, பாலசுப்ரமணி, வீட்டின் உள் தாழ்பாள் போட்டு கொண்டு, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சக்திவேல் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி