உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...

பணி நிறைவு பாராட்டு விழா

செஞ்சி: ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா செஞ்சி வட்டார வளமையத்தில் நடந்தது. வட்டார தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணை செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். பொருளாளர் சிந்தாமணி, செயலாளர்கள் ஆரோக்கியதாஸ், லுார்துசேவியர், சாந்தகுமாரி முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் தாஸ் சிறப்புரையாற்றி ஓய்வு பெறும் ஆசிரியர்களை கவுரவித்தார். ஓய்வு பெறும் தலைமையாசிரியர்கள் பிரபாவதி, பசலுன்னிசா, ஆசிரியர்கள் சேகர், லில்லிமேரி ஒலிவியா ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர்.

முற்றோதல் நிகழ்ச்சி

கண்டாச்சிபுரம்: ராமநாதீஸ்வரர் கோவிலில் ஆவணி முற்றோதலையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு ராமநாதீஸ்வர், ஞானாம்பிகை அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. ஓதுவார் பார்த்திபன் தலைமையில் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

மரக்காணம்: மரக்காணம் நகரம், கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு அவைத் தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ரவிகுமார், ஒன்றிய செயலாளர் தயாளன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மஸ்தான், வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் பேசினர். மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் சீதாபதி, மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் ரமணன் உட்பட பலர் பங்கேற்றனர். பல்வேறு கட்சியில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்த தொண்டர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை அமைச்சர் வழங்கினார்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், உதவி பேராசிரியர் புவனேஸ்வரி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் கடலுார் ஸ்டேட் பாங்க் அதிகாரி கீதா வங்கித் துறைகளில் தொழில் வாய்ப்பு தலைப்பில் பேசினார். மேலும், இலக்குகளை அடைவது குறித்தும் பேசி, மாணவியர்களை உற்சாகப்படுத்தினார். உதவி பேராசிரியர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.

மேலாண்மைக்குழு கூட்டம்

விக்கிரவாண்டி: தொரவி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைமை ஆசிரியர் செல்லையா தலைமை தாங்கினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜெயச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஜான்சன் வரவேற்றார். மேலாண்மை குழு புதிய தலைவராக தேன்மொழி மற்றும் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் நாகராணி, சந்திரா, புஷ்பவள்ளி, பெமினா, புனிதா, சூர்யகலா, அருளரசி, சங்கரி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை