உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அமைச்சர் மஸ்தான் துவக்கி வைப்பு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அமைச்சர் மஸ்தான் துவக்கி வைப்பு

செஞ்சி: செஞ்சி ஒன்றியம் அப்பம்பட்டு ஊராட்சியில் கொணலுார், மேலருங்குணம், வரிக்கல், அணையேரி, தச்சம்பட்டு, அத்தியூர், மாத்துார் திருக்கை, காரை ஆகிய கிராம மக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தமிழரசன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் முகுந்தன் வரவேற்றார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் பொது மக்களிடம் மனுக்களை பெற்று முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தாசில்தார் ஏழுமலை, துணை சேர்மன் ஜெயபாலன், பி.டி.ஓ.,க்கள் சீத்தாலட்சுமி, முல்லை, ஒன்றிய செயலாளர் விஜயராகவன், ஊராட்சி தலைவர் ரவி, ஏ.பி.டி.ஓ.,க்கள் பழனி, கந்தசாமி மற்றும் 15 துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அனந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை