| ADDED : ஜூன் 27, 2024 03:01 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் எழுச்சியை பார்க்கும் போது பா.ம.க., டிபாசிட் இழப்பது உறுதியாகிவிட்டது என தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் பொன்முடி பேசினார்.விக்கிரவாண்டி தொகுதி ,காணை மத்திய ஒன்றியம் கஞ்சனுார்,கொரலுார்,மேல்காரணை ,கல்யாணம்பூண்டி, சாலவனுார்,பெருங்கலாம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் பொன்முடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் பெண்கள் முன்னேற்றத்திற்காகவே நல்ல பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியில் ஆணும் பெண்ணும் சமம் என்பதே ஆகும். ஓட்டு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் திரளாக கூடி வரவேற்பதை பார்க்கும் போது, இத் தேர்தலில் பா.ம.க., டெபாஸிட் இழப்பது உறுதியாகி விட்டது என்று அமைச்சர் பொன்முடி பேசினார்.தொடர்ந்து வேட்பாளர் அன்னியூர் சிவா பேசும் போது,''காணை ஒன்றியம் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளில் பின் தங்கியிருந்தது.அதையெல்லாம் அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று சரி செய்து கொடுத்துள்ளேன் .என்னை நீங்கள் வெற்றி பெற செய்தால் விவசாய பகுதியான இப்பகுதி மக்களுக்கு நீர் ஆதார தேவையான நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி தருவேன்' என்று பேசினார். இதில் மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி , மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன்,பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், திருச்சி மேயர் அன்பழகன்,சேலம் மாவட்ட செயலாளர் சிவலிங்கம், காணை மத்திய ஒன்றியசெயலாளர் முருகன், வடக்கு ஒன்றி செயலாளர் முருகன், வி.சி.க., மாவட்ட செயலாளர் பெரியார் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர் .