| ADDED : ஜூலை 27, 2024 02:02 AM
விக்கிரவாண்டி: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்த தி.மு.க., ஆட்சியின் சாதனைக்காக மக்கள் இடைத்தேர்தலில் மகத்தான வெற்றியை தந்துள்ளனர் என அமைச்சர் பொன்முடி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.,வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதை முன்னிட்டு, தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நேற்று நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது; இடைத்தேர்தலில் 68 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த அனைத்து வாக்காளர்களுக்கும் ,இந்த வெற்றிக்காக பாடுபட்ட அமைச்சர் உதயநிதி ,அனைத்து அமைச்சர்களுக்கும், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் திருமாவளவன் உள்ளிட்ட அனைவருக்கும் அன்னியூர் சிவா சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழக முதல்வர் கடந்த மூன்று ஆண்டுகள் செய்த சாதனைக்காக மக்கள் இடைத்தேர்தலில் மகத்தான வெற்றியை தந்துள்ளனர் .தொகுதி மக்களின் கோரிக்கைகளை எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா முதல்வரிடம் கூறி நிறைவேற்றி தருவார்.இந்த தேர்தல் வெற்றி மூலம் விழுப்புரம் மாவட்டம் திமுக.,வின் னஜ; கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. விழுப்புரத்தில் திமுக சார்பில் மத்திய அரசு தனது பட்ஜெட்டில் தமிழகத்தைபுறக்கணித்ததை கண்டித்து நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறேன் என்று அமைச்சர் பொன்முடி பேசினார்.