உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கல்

மயிலம் : மயிலம் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் அமைச்சர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.ரெட்டணை கிராமத்தில் நடந்த முகாமிற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமதாஸ் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், அமைச்சர் மஸ்தான், மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், துணை ஆட்சியர் முகுந்தன் ஆகியோர் அரசின் திட்டங்கள் குறித்து பேசினர்.இதில் துணைச் சேர்மன் புனிதா மாவட்ட கவுன்சிலர் மகேஸ்வரி விஜயன் ஒன்றிய கவுன்சிலர் ராஜ் பரத் ஊராட்சி தலைவர் குமுதா, ஒன்றிய செயலாளர் மணிமாறன், செழியன் மற்றும் மயிலம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ