உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நிதி ஒதுக்க முடியாது என மிரட்டும் அமைச்சர்கள்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு

நிதி ஒதுக்க முடியாது என மிரட்டும் அமைச்சர்கள்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு

திண்டிவனம் : 'முதல்வர் பிரசாரம் செய்தாலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., தோற்பது உறுதி' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.இதுகுறித்து அவர் நேற்று தைலாபுரத்தில் அவர் கூறியதாவது:தி.மு.க., அரசுக்கு எதிராக மக்கள் இருப்பதால், இடைத்தேர்தலில் தோல்வி ஏற்படும் என தி.மு.க., அஞ்சுகிறது. அதனால்தான் பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துள்ளது. அன்புமணி பிரசார கூட்டத்திற்கு பொது மக்கள் யாரும் செல்லக்கூடாது என்பதற்காக, தி.மு.க., அலுவலகத்தில் அடைத்து வைக்கின்றனர். பா.ம.க.,விற்கு ஓட்டு போட்டால் நுாறு நாள் வேலை திட்ட பணிகள் வழங்க மாட்டோம். ஊராட்சிக்கு நிதி ஒதுக்க மாட்டோம் என அமைச்சர்கள் மிரட்டுகின்றனர். இத்தனை அத்துமீறல்களையும் தாண்டி பா.ம.க., 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும்.அ.தி.மு.க., - பா.ம.க.,விற்கு பொது எதிரி தி.மு.க.,தான். எனவே, அ.தி.மு.க.,வினர் ஓட்டுகளை வீணாக்காமல் இடைத் தேர்தலில் பா.ம.க.,விற்கு ஆதரவு தர வேண்டும். தமிழகத்தில் சமூக நீதியை காக்க ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இல்லையெனில் பதவி விலக வேண்டும்.ஜாதி வாரி இடஒதுக்கீட்டால் பலர் டாக்டர், பட்டப்படிப்பு படித்துள்ளது தி.மு.க., உள்ளிட்ட திராவிட இயக்கத்தினர் போட்ட பிச்சை என்றும், அதனால்தான் இன்று நாய் கூட பி.ஏ., பட்டம் பெறுகிறது என தி.மு.க., அமைப்பு செயலாளர் பாரதி கூறியது கண்டிக்கத்தக்கது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் முதல்வரே பிரசாரம் செய்தாலும் தி.மு.க., தோற்பது உறுதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 05, 2024 04:41

அய்யா நீங்க சொல்லிடீங்க ஆனா தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட ba செர்டிபிகேட் ஹோல்டர் தான் என்பதாலே திமுக பேச்சாளர் அப்படி சொல்லியிருக்கலாம்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி