உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாதிரி போட்டித் தேர்வு

மாதிரி போட்டித் தேர்வு

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி அறிவுசார் மையத்தில் போட்டித் தேர்வு நடந்தது.திண்டிவனம், சந்தைமேட்டில், நகராட்சி நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் உள்ளது. இந்த மையம் மூலம், டி.என்.பி.எஸ்.சி.,உள்ளிட்ட போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.மையத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு போட்டி தேர்விற்கான மாதிரி தேர்வு நேற்று காலை நடந்தது. நகராட்சி கமிஷனர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கி, தேர்வை துவக்கி வைத்தார்.தமிழ்ச்சங்கத் தலைவர் துரை ராஜமாணிக்கம், போட்டித்தேர்வின் அறிவுரையாளர் ஏழுமலை, நுாலகர் மாலதி, உதவியாளர் மாரியம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.போட்டித்தேர்வில் திண்டிவனம் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த 50 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ