உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நிலத்தில் மர்ம சூட்கேஸ் திண்டிவனம் அருகே பரபரப்பு

நிலத்தில் மர்ம சூட்கேஸ் திண்டிவனம் அருகே பரபரப்பு

திண்டிவனம்: திண்டிவனம் அருகே நிலத்தில் கிடந்த மர்ம சூட்கேசால் பரபரப்பு நிலவியது.திண்டிவனம் அடுத்த ஆசூர் கிராமத்தில் விவசாய நிலம் அருகே முட்புதரில் சூட்கேஸ் கிடப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாக வெள்ளிமேடுபேட்டை போலீசாருக்கு நேற்று காலை 10:30 மணிக்கு தகவல் கிடைத்தது.போலீசார் விரைந்து சென்று, புதரில் கிடந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில், ஆண் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் இருந்தது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த போலீசார், புதரில் தேடியபோது, பாம்பு ஒன்று இறந்து அழுகி கிடந்ததும், அதன் காரணமாகவே துர்நாற்றம் வீசியது தெரிய வந்த பின்னரே போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி