மயிலம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
மயிலம் : மயிலம் சிவஞான பாலய சுவாமி கள் தமிழ் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் தேசியக் கருத்தரங்கம் நடந்தது.மயிலம் கல்லூரி சிவப்பிரகாசர் அரங்கில் நடந்த தேசிய கருத்தரங்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ராஜ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். வணிகவியல் துறை தலைவர்கள் வீரமுத்து, அருணகிரி அறிமுக உரையாற்றினார்கள்.பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் நோயலின் பிபியானா அருள்மேரி சிறப்புரை ஆற்றினார்.இதில் கல்லூரி பேராசிரியர்கள் சுதா அன்பழகன், ரூபாவதி, அமுதவள்ளி, ஹரிஷ் பாபு மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் அமுதவள்ளி நன்றி கூறினார்.