உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பெண்கள் பள்ளியில் நீட் மாதிரி தேர்வு

அரசு பெண்கள் பள்ளியில் நீட் மாதிரி தேர்வு

திண்டிவனம் : திண்டிவனம் முருங்கப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீட் மாதிரி தேர்வு நடந்தது.மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வு எழுதும் வகையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில், விழுப்புரம் மாவட்டத்தில் சில பள்ளிகளில், நீட் தேர்வில் பங்கேற்பதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.இதே போல் திண்டிவனம் கல்வி மாவட்டத்தில், திண்டிவனம், முருங்கப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 30க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு நேற்று மாநிலம் முழுதும் நீட் மாதிரி தேர்வு நடந்தது.திண்டிவனம் முருங்கப்பாக்கம் அரசு பள்ளியில் நேற்று நீட் மாதிரி தேர்வு நடந்தது. இதில் 30 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் நீட் மாதிரி தேர்வு எழுதினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ