உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அங்காளம்மன் கோவிலில் அமாவாசை வழிபாடு

அங்காளம்மன் கோவிலில் அமாவாசை வழிபாடு

விழுப்புரம்: சிறுவந்தாடு கிராமத்தில், சக்தி ஸ்தலமாக போற்றப்படும் அங்காளம்மன், ஆனந்தாயி, பூங்காவனம் அம்மன் கோவிலில், நேற்று அமாவாசை உற்சவம் நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு மூலவர் அங்காளம்மன், ஆனந்தாயி, பூங்காவனம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, உற்சவர் அங்காளம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு உற்சவர் அங்காளம்மன் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலம்

பாதிராப்புலியூர் சோலை வாழியம்மன் கோவிலில் நேற்று காலை சுவாமி சிறப்பு அபிேஷக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள சிவபெருமான், அய்யனாரப்பன், சப்த கன்னிமார் சுவாமிகளுக்கு சிறப்பு பாலாபிேஷகம் செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை