உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நர்சிங் மாணவி மாயம் போலீசார் விசாரணை 

நர்சிங் மாணவி மாயம் போலீசார் விசாரணை 

திண்டிவனம் : திண்டிவனம் அருகே வீட்டை விட்டு சென்ற மகளை காணவில்லை என்று தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். திண்டிவனம் அருகே உள்ள சிறுநாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 44; இவரது மகள் செல்வராணி, 22; இவர் ஆலம்பூண்டியிலுள்ள தனியார் கல்லுாரியில் நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் திண்டிவனத்திலுள்ள தனியார் லேப்பில் பார்ட் டைம் வேலை செய்து வந்துள்ளார். மாணவி கடந்த 23 ம் தேதி வீட்டிலிருந்து திண்டிவனத்திற்கு வந்தவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. இதை தொடர்ந்து மாணவியின் தந்தை சிவக்குமார் கொடுத்துள்ள புகாரின் பேரில், வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை