உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாரி மோதி ஒருவர் பலி 

லாரி மோதி ஒருவர் பலி 

திண்டிவனம்: திண்டிவனம் அருகே லாரி மோதி இறந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி எய்ச்சர் லாரி நேற்று காலை சென்று கொண்டிருந்தது. லாரியை சேலம், ஆத்துாரைச் சேர்ந்த விஷ்ணு, 23; ஓட்டினார். காலை 7:15 மணியளவில் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் கூட்ரோட்டில் வந்த போது, திடீரென்று சாலையைக் கடந்தவர் மீது லாரி மோதி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதல், லாரியில் அடிபட்ட நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இறந்த நபர் யார் என்ற தெரியவில்லை. ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ