உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இயற்கை வேளாண்மை இடுபொருள் மகளிர் சுயஉதவிக்குழு தயாரிப்பு

இயற்கை வேளாண்மை இடுபொருள் மகளிர் சுயஉதவிக்குழு தயாரிப்பு

விழுப்புரம்: வானுார் அடுத்த தென்சிறுவள்ளூரில் வசந்தம் மகளிர் குழுவினரால் இயற்கை வேளாண்மை இடுபொருட்கள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருவதாக, வசந்தம் மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கலைவாணி தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:எங்கள் குழுவில் 15 மகளிர் விவசாயிகள் சேர்ந்து வசந்தம் மகளிர் இயற்கை வேளாண்மை இடுபொருள் உற்பத்தி குழு துவங்கினோம். இக்குழுவில் உள்ள மகளிர் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இயற்கை வேளாண்மைக்கு தேவையான முக்கிய இடுபொருளான பஞ்சகாவியா, மீன் அமிலம், தசகாவ்யா, மண்புழு உரம், மண்புழு நீர் ஆகியவை தயார் செய்து இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறோம்.தற்போதுள்ள சூழ்நிலையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க இயற்கை இடுபொருள்கள் முக்கிய பங்கு வகிப்பதால் அதை உற்பத்தி செய்ய தீர்மானித்தோம். மேலும் இந்த இடுபொருட்கள் வெளிச்சந்தையில் உள்ள பூச்சி மருந்து கடைகளில் கிடைக்காது என்பதால் நாங்களே அதை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.எங்கள் குழுவிற்கு வேளாண்மை துறை மூலம் கடந்த ஆண்டு மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்து மானியமாக ஒரு லட்சம் ரூபாய் பெற்று இடுபொருள் மையத்தை ஆரம்பித்தோம். இதற்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் தேவைக்கு ஏற்ப உடனுக்குடன் தயார் செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். இயற்கை இடுபொருட்கள் தேவைப்படும் விவசாயிகள் எங்களை தொடர்பு கொண்டால் உடனடியாக இயற்கை இடுபொருள் உற்பத்தி செய்து தருவோம்.இவ்வாறு கலைவாணி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ