| ADDED : ஜூன் 19, 2024 01:24 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் பயன்பாடற்ற சேதமடைந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே வி.ஜி.பி., நகர் (தெற்கு), அப்துல் கலாம் நகரில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்தேக்க தொட்டி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக கட்டப்பட்டது.சில ஆண்டுகளாக இந்த நீர்தேக்க தொட்டி பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால், குடிநீர் தொட்டியின் பில்லர்களின் சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், பலவீனமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.பயன்பாடற்ற பழுதான குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.