உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் தர்ணா

கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் தர்ணா

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த ஊராட்சி பெண் தலைவர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.திண்டிவனம் அடுத்த அவ்வையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக் கண்ணன் மனைவி மகாலட்சுமி. ஊராட்சி தலைவர். இவர், நேற்று பிற்பகல் 3:30 மணிக்கு, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தவர், திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானப்படுத்தி, அதிகாரிகளிடம் மனு அளிக்குமாறு அனுப்பி வைத்தனர்.அவர் அளித்த மனு விபரம்:எங்கள் கிராமத்தில், பட்டியல் இன முதல் ஊராட்சி தலைவராக நான் தேர்ந்தெடுத்து பணியாற்றி வருகிறேன். துணை தலைவராக உள்ள வீரமணி, என்னை பணி செய்ய விடாமல் இடையூறாக இருந்து வருகிறார். நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஜாதிய பாகுபாடுடன் நடப்பதோடு, ஊராட்சி நிர்வாகப் பணிகளை நான் செய்வதை தடுக்கிறார். 7 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்த இரண்டு குடிநீர் திட்டப் பணிகளுக்கு, நிதி பெற கையெழுத்திடாமல் அலைகழித்து வருகிறார். இது குறித்து, விசாரித்து, துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ