உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 10ம் வகுப்பு தேர்வில் போன் நேரு பள்ளி சதம்

10ம் வகுப்பு தேர்வில் போன் நேரு பள்ளி சதம்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்டத்தில் நான்காம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளியில் தேர்வு எழுதிய 34 மாணவ, மாணவியர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவி நந்தினி 492 மதிப்பெண், பரமேஸ்வரி 490, மாணவர் ஸ்ரீவர்ஷன் 484 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.கணிதத்தில் பரமேஸ்வரி, நந்தினி மற்றும் ஹாஜிரா, சமூக அறிவியலில் பரமேஸ்வரி, தீலிபன் ஆகியோார் 100க்கு100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவியர்களை பள்ளி உதவி தலைமையாசிரியர் சிவக்குமார் கவுரவித்தார். கணித ஆசிரியர் சாருஹாசன், அறவியல் ஆசிரியர் திருநாவுக்கரசு மற்றும் ஆங்கில ஆசிரியை இந்துமதி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை