உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொன்முடி மீதான குவாரி வழக்கு: மாஜி கலெக்டர் சாட்சியம்

பொன்முடி மீதான குவாரி வழக்கு: மாஜி கலெக்டர் சாட்சியம்

விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், முன்னாள் கலெக்டர் பழனிசாமி ஆஜராகி சாட்சியம் அளித்தார்.விழுப்புரம் மாவட்டம், பூத்துறை குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உட்பட 8 பேர் மீது, கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கில் மொத்தமுள்ள 67 சாட்சிகளில் 45 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 28 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.நேற்றைய விசாரணையில், முன்னாள் கலெக்டர் பழனிசாமி பகல் 12:00 மணிக்கு ஆஜராகி சாட்சியம் அளித்தார்.அதில், 'கடந்த 2008 முதல் 2011 வரை விழுப்புரம் கலெக்டராக பணியாற்றிய போது, வானுார் தாசில்தார், விழுப்புரம் ஆர்.டி.ஓ., கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் கொடுத்த அறிக்கை மற்றும் ஆவணங்களை பரிசீலனை செய்து், ராஜமகேந்திரன், கவுதம சிகாமணி பெயரில் செம்மண் குவாரி உரிமத்துக்கான அனுமதி வழங்கப்பட்டது' என்றார்.தொடர்ந்து, நீதிபதி கேட்ட சில கேள்விகளுக்கு பழனிசாமி பதில் அளித்தார். மீண்டும், மதியம் 2:15 மணிக்கு ஆஜரானவரிடம், அமைச்சர் பொன்முடி தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர். விசாரணை மதியம் 2:30 மணி வரை நடந்தது.சாட்சி மற்றும் குறுக்கு விசாரணையை பதிவு செய்து கொண்ட நீதிபதி பூர்ணிமா வழக்கின் விசாரணை மீண்டும் நாளை (இன்று) நடைபெறும் என அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

A.M.Bashkaran
ஆக 07, 2024 12:37

Mostly surprise check ups and disciplinary actions on the sub ordinates are rare in Revenue administration. To escape from their responsibility, approving authorities simply record that based on subordinates reports, it is approved.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ