உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தனியார் நிறுவன தொழிலாளி காயம் உரிமையாளர்கள் மீது வழக்கு

தனியார் நிறுவன தொழிலாளி காயம் உரிமையாளர்கள் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி கை விரல்கள் முறிந்ததால், உரிமையாளர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.விழுப்புரம் அடுத்த கஞ்சனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கதிரவன், 31; இவர், விழுப்புரம் அக்பர் நகரில் உள்ள தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் இயந்திர ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 10ம் தேதி பணியில் ஈடுபட்ட போது, கதிரவனின் கை இயந்திரத்தில் சிக்கி இடது கைவிரல் முறிந்தது. உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இது குறித்து, கதிரவனின் மனைவி அம்சவள்ளி கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் தனியார் கம்பெனி உரிமையாளர்களான வெற்றிவேல் அவரது மகன் தமிழரசன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ