உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பூங்கா முன் சாலையை ஆக்கிரமித்து நடந்த பணியை எதிர்த்து போராட்டம்

பூங்கா முன் சாலையை ஆக்கிரமித்து நடந்த பணியை எதிர்த்து போராட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் பூங்கா முன் சாலையை ஆக்கிரமித்து நடந்த பணியை குடியிருப்பு சங்கத்தினர் தடுத்து நிறுத்தினர்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள காமதேனு நகரில், நகராட்சியின் புதிய சிறுவர் பூங்கா உள்ளது. அதன் வாயில் பகுதியில், ஆக்கிரமிப்பை தவிர்ப்பதற்காக, பேவர் பிளாக் கற்கள் பதிக்க நகராட்சியில் முடிவு செய்து, நேற்று காலை அதற்கான பணிகளைத் தொடங்கினர். இதற்காக பூங்கா வாயில் பகுதியில், 50 மீட்டர் நீளத்திற்கு பள்ளம் எடுத்து, தார் சாலை வரை பேவர் பிளாக் புதைப்பதற்கு, பணிகளை மேற்கொண்டனர்.இதனையறிந்த காமதேனு நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் திருப்பதி பாலாஜி தலைமையில், நிர்வாகிகள் திரண்டு, சாலையை ஆக்கிரமித்து பணிகள் நடப்பதாக கூறி, பணியை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்து வந்த நகராட்சி அலுவலர்கள், பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடியிருப்பு வாசிகள் கூறுகையில், 'பூங்காவுக்கு எதிரே, இங்குள்ள சாலையின் மட்டத்தை விட உயரமாக பேவர் பிளாக் கற்கள் பதிப்பதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும், சிலரது துாண்டுதல் பேரில், சாலையை ஆக்கிரமித்து பணிகள் நடப்பதை நிறுத்த வேண்டும்' என்றனர். போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல், சாலையின் உயரத்துக்கு சமமாக பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படும் என நகராட்சி அலுவலர்கள் உறுதியளித்தனர். இதனையடுத்து, குடியிருப்போர் நலச்சங்கத்தினர், போராட்டத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை