உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கண்டன ஆர்ப்பாட்டம்: பா.ஜ.,வினர் 80 பேர் கைது

கண்டன ஆர்ப்பாட்டம்: பா.ஜ.,வினர் 80 பேர் கைது

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் காங்., கட்சியை கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.,வினர் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.காங்., கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு தலைவர் சாம் பெட்ரோடா நிறவெறியைத் துாண்டும் வகையில் தென் இந்தியர்களை கடுமையாக விமர்சித்து பேசியதை கண்டித்து பா.ஜ.க., சார்பில் விக்கிரவாண்டி தாலுகாஅலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்பாட்டத்திற்கு, தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.ஆர்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் தங்கம், முரளி, சதாசிவம், சத்யநாராயணன், எத்திராஜ், மாவட்ட பொருளாளர் குமாரசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அசோக்குமார் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.தேர்தல் விதி முறை அமலில் இருப்பதாலும், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காகவும் 5 பெண்கள் உட்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ