| ADDED : ஆக 07, 2024 05:49 AM
விழுப்புரம், ஆக. 7-தமிழ்நாடு வனத்துறை விழுப்புரம் வனக்கோட்டம், வனச்சரகம் சார்பில் விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு விலையில்லா மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.தமிழ்நாடு வனத்துறை விழுப்புரம் வனக்கோட்டம், வனச்சரகம் சார்பில் விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு விலையில்லா தேக்கு, மகாகனி, நீர்மருது, தான்றி ஆகிய தடி மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளது. விவசாயிகள் நடவு செய்யவுள்ள இடத்தின் சிட்டா நகல், ஆதார் நகல், பாஸ்போட் அளவு போட்டோவை ஒப்படைத்து மரக்கன்றுகள் பெற்று கொள்ளலாம். இந்த நகல்களை, விவசாயிகள் கண்டாச்சிபுரம் அடுக்கம் மத்திய நாற்றங்கால், மேலக்கொந்தை மாவட்ட மத்திய நாற்றங்கால் அலுவலகத்தல் வழங்க வேண்டும். இது பற்றிய மேலும் விபரங்கள் பெற விரும்புவோர், வனச்சரகர்கள் சுகுமார், மொபைல் 9962637936, குணசேகரன், மொபைல் 9698999771 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவல் தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.